சிவபுராணம் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். Sivapuranam lyrics both in Tamil and English. ☆ சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். ☆ Sivapuranam is a part of Tamil Saivism poem Thiruvaasakam written by Saint poet Manikkavaasakar in the end of 9th century C.E ☆ திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. ☆ Those who don't melt by heart for Thiruvaasakam don't get melted for anything. They are equivalent to mere stones. ☆ சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. ☆ Sivapuranam is the first poem in the book of Thiruvaasakam ☆ 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. ☆ Sivapuranam have 95 verses and it had been written in KaliVenbha grammar rule. ☆ This poem was written on praise of God Shiva which praises and describes his actions and appearances. ☆ அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. ☆ This poem also highlights the way by which the earthly beings can reach the God as stated by Saiva Siddhantham. ☆ மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. ☆ Sivapuranam had been written in simple Tamil words that even after 1100 years it is easily understandable. ☆ முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். ☆ Manikkavaasakar states that he sung this poem Sivapuranam to get rid of the sins which he committed in the previous birth in the 19th and 20th lines of the poem. ☆ இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள். ☆ He also states that those who recite the same poem from heart, understanding the meaning together with it will reach the feet of God Shiva. முன் ஜென்ம பாவங்களை தீர்க்க மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் | Sivapuranam | Tamil & English lyrics 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #sivapuranam #tiruvasakam #tamilsaivam #thirumurai #tirumurai #tamil #saivam #namashivaya #shivayanama #godshiva #natarajar #chidambaram #manikavasakar #tamilnadu #thiruvaasakam