சென்னை பெரவள்ளூரில் ஹரி கோவிந்த் என்பவரின் காம்ப்ளக்ஸ் உள்ளது. 3 மாடி காம்ப்ளக்ஸில் காபி ஷாப், ஜிம், ஸ்னூக்கர் விளையாட்டு கூடம் ஆகியவை உள்ளன. இன்று மதியம் இரண்டாவது தளத்திலிருந்த ஸ்னூக்கர் விளையாட்டு கூடத்தில் தீப்பிடித்து மற்ற தளங்களுக்கும் பரவியது. தீ வேகமாக பரவியதால் உள்ளே இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் இரண்டாவது தளத்தில் இருந்து 6 பேர் கீழே குதித்து தப்ப முயற்சினர். அதில் 5 பேர் லேசான காயத்துடன் தப்பினர். கொளத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். அவர் பெரியார் நகர் அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். #FireAccident #Peravallur #Chennai #Dinamalar #