ஆட்டோ, பைக், கடையை துவம்சம் செய்த கார் Chennai Accident | 4 people injured | Velachery 100 Feet Road | சென்னையில் கிண்டி - வேளச்சேரி 100 அடி ரோட்டில் மாருதி ஸ்விப்ட் கார் வேகமாக சென்றது. முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருப்பதற்காக கார் டிரைவர் பிரேக் பிடிக்க முயன்றார். தவறுதலாக பிரேக் பெடலுக்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினார். தாறுமாறாக ஓடிய கார், எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. ஆட்டோவை தரதரவென சிறிது தூரம் இழுத்துச்சென்ற கார், டூவீலரையும் இடித்து தள்ளியது. சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் மீது கார் மோதியதுடன், தள்ளுவண்டி இளநீர் கடை மீது மோதி நின்றது. ஆட்டோ, டூவீலர் மற்றும் தள்ளுவண்டி கடையுடன் விபத்து ஏற்படுத்தி காரும் நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் தாமஸ், இளநீர் கடைக்காரர் நாராயணசாமி, டூ வீலரில் சென்ற சிராஜ் அகமது, நடந்து சென்ற சைமன் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரை ஒட்டி வந்த திருவொற்றியூரை சேர்ந்த 34 வயதான பிரகதீஷ் கைது செய்யப்பட்டார். பில்டிங் கான்ட்ராக்டரான இவர், வேளச்சேரியில் இடம் பார்ப்பதற்காக சென்றபோது விபத்து நடந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.#ChennaiAccident #4peopleinjured #Velachery100FeetRoad

4peopleinjuredChennaiAccidentVelachery100FeetRoad